கத்தோலிக்க திருசபையின் தலைவர் போப் பிரான்சிஸ் (88 வயது) நுரையீரல் அழற்சி நோயால் அவதிப்பட்டு வந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 21) காலை உயிரிழந்ததாக வாடிகன் அறிவித்தது.
போப் ஆண்டவர்கள் மறைவுக்குப் பிறகு நல்லடக்க சடங்குகள் மிக விரிவாக நடப்பது வழக்கம்.
ஆனால் முந்தைய போப்களின் பிரம்மாண்ட இறுதிச் சடங்குகளைப் போல் அல்லாமல் தனது இறுதிச் சடங்கு மிகவும் எளிமையான முறையில் நடைபெற வேண்டும் என்று போப் பிரான்சிஸ் விரும்பினார்.
மற்ற போப்ஸ் அடக்கம் செய்யப்பட்ட புனித பீட்டர்ஸ் பசிலிக்காவின் கல்லறையில் அடக்கம் செய்யப்படுவதை விட வாடிகன் நகரத்திற்கு வெளியே உள்ள புனித மேரி மேஜர் பசிலிக்காவில் தன்னை அடக்கம் செய்ய போப் பிரான்சிஸ் விரும்பினார்.
அங்குள்ள கன்னி மரியாளின் உருவத்தின் மீது அவர் கொண்டிருந்த பக்தி காரணமாக இந்த முடிவை அவர் எடுத்தார். பிரான்சிஸ் ஒவ்வொரு முறையும் வெளிநாட்டுப் பயணத்திலிருந்து திரும்பும்போது கன்னி மரியாள் முன்பு பிரார்த்தனை செய்வார். அதே இடத்தில் அவருடைய உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.
ஒரு பிஷப் இறுதிச் சடங்குகளில் கடைப்பிடிக்கப்படும் அதே இறுதிச் சடங்குகள் தனக்கும் பொருந்த வேண்டும் என்று பரிந்துரைத்தார்.
அதன்படி இறந்த போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கு அவர் விரும்பியபடி 3 கட்டங்களாக நடைபெறும். பாரம்பரியமாக திங்கள்கிழமை காலை போப்பின் மரணம் உறுதி செய்யப்பட்டது. அவரது உடல் பக்தர்கள் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக 3 நாட்கள் செயிண்ட்ஸ் பசிலிக்கா தேவாலயத்தில் வைக்கப்படுகிறது.
கடந்த காலத்தில் இறந்த போப்களின் உடல் சைப்ரஸ் ஈயம் மற்றும் ஓக் ஆகியவற்றால் ஆன 3 சவப்பெட்டிகளில் ஒன்றின் உள்ளே மற்றொன்று வைக்கப்பட்டது.
ஆனால் போப் பிரான்சிஸ் உடல் துத்தநாக விளிம்புடன் கூடிய மர சவப்பெட்டியில் பாதுகாக்கப்படுகிறது. அதில் வைக்கப்படுவதற்கு முன்பு போப்பின் உடல் மீது மத நடவடிக்கைகளின் போது அவர் அணியும் பாரம்பரிய சிவப்பு அங்கி மிட்டர் என்று அழைக்கப்படும் வெள்ளைத் தொப்பியையும் மத விழாக்களின் போது அவர் அணியும் கம்பளி போன்றவை அணிவிக்கப்படுகிறது.
பசிலிக்காவில் போப்பின் உடல் புனிதர்களின் வழிபாட்டு பாடலுடன் புனித பீட்டர் பசிலிக்காவிற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது.
கடந்த காலத்தில் போப்பின் சவப்பெட்டி உயர்த்தப்பட்ட மேடையில் வைக்கப்பட்டது. இப்போது. அந்த வழக்கம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.தேவாலயத்தில் அமர்ந்திருக்கும் அனைவருக்கும் போப்பின் உடல் தெரியும் வகையில் சவப்பெட்டி வைக்கப்பட்டுள்ளது.
இறுதிச் சடங்கிற்கு முந்தைய இரவு கமெர்லெக்னோ சவப்பெட்டி சீல் வைக்கும் விழாவைச் செய்கிறார்.
இந்த நிகழ்வு மற்ற கார்டினல்கள் முன்னிலையில் நடைபெறும்.
போப்பின் இறுதிச் சடங்ககிற்கு கார்டினல்கள் கல்லூரியின் டீனும் அவரது வாரிசான உச்சப் போப்பாண்டவரும் தலைமை தாங்குகிறார்கள்.
போப் பிரான்சிஸ் அறிமுகப்படுத்திய சீர்திருத்தங்களின்படி அவரது உடல் வாடிகன் நகருக்கு வெளியே அடக்கம் செய்யப்படுகிறது. இந்த நிகழ்விற்கு கமர்லெக்னோ தலைமை தாங்குகிறார்.
கடந்த 100 ஆண்டுகளில் வாடிகன் நகருக்கு வெளியில் நல்லடக்கம் செய்யப்படும் முதல் போப் இவர்தான். இன்று கார்டினல் குழு கூட்டத்தின்பின் நாளை நல்லடக்கம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.