இறுதிச் சடங்கு செய்ய செலவாகும் என்பதால் இறந்த தந்தையின் உடலை அலமாரியில் 2 வருடமாக மறைத்து வைத்த மகன்

 ஜப்பானில் இறுதி சடங்கு செய்ய பணம் இல்லாததால் தந்தையின் சடலத்தை 2 ஆண்டுகளாக வீட்டு அலமாரியில் ஒளித்து வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவை சேர்ந்த 56 வயதான நோபுஹிகோ சுசுகி என்ற நபர், உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த ஒரு வாரமாக உணவகம் திறக்கப்படாமல் இருந்ததால் அக்கம் பக்கத்தினர் சந்தேகமடைந்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், நோபுஹிகோ சுசுகி வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது அவரது வீட்டு அலமாரியில், எலும்புக்கூடு ஒன்று இருந்துள்ளது. இதுதொடர்பாக அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், வேலை முடிந்து திரும்பியபோது தனது 86 வயதான தந்தை வீட்டில் இறந்து கிடந்தார், ஆனால் எப்படி இறந்தார் என்று தெரியவில்லை. அவருக்கு இறுதிச் சடங்குகள் செய்வதற்கு அதிகளவு செலவாகும் என்பதால், அதை தவிர்க்க தந்தையின் உடலை அலமாரியில் மறைத்து வைத்ததாக சுசுகி தெரிவித்தார்.

எனினும் தந்தையின் ஓய்வூதியத்தை 2 ஆண்டுகளாக பெற்று வந்ததால், சந்தேகத்தின் அடிப்படையில் அவரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஜப்பானில், இறுதிச்சடங்கு செய்வதற்கு 1.3 மில்லியன் யென் (இந்திய மதிப்பில் ரூ.7.60 லட்சம்) ஆகும் என மதிப்பிடப்படுகிறது. 



Post a Comment

Previous Post Next Post
video/Video

Contact Form