ஆந்திரம் மாநிலம் திருப்பது அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதிய விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 5 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 2 பேர் படுகாயத்துடன் திருப்பதி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்து முடித்துவிட்டு மீண்டும் வேலூர் நோக்கி பக்தர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது அதிவேகமாக சென்ற கார் முன்னே சென்ற கண்டெய்னரை கடக்க முயன்ற போது கட்டுப்பாட்டை இழந்து கண்டெய்னர் லாரியின் பின்புறம் மோதி லாரியின் அடியில் கார் புகுந்து விபத்துக்குள்ளனது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 2 பெண்கள், 1 சிறுவன் உள்பட 5 பேர் உயிரிழந்ததாகவும் 2 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.