குண்டுவெடிப்பு வழக்கில் உயர்நீதிமன்றில் சாட்சியமளித்த மைத்திரி

2008 ஆம் ஆண்டு பொரலஸ்கமுவ பகுதியில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பான வழக்கில் சாட்சியாகப் பெயரிடப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  இன்று (28) கொழும்பு உயர் நீதிமன்றத்தில் சாட்சியமளித்தார்.

2008 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் திகதி பொரலஸ்கமுவ பகுதியில் அப்போதைய விவசாய அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவை கொல்லும் நோக்கில் தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு உதவியதாக இரண்டு பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று கொழும்பு உயர் நீதிமன்ற நீதியரசர் ஆர்.எஸ்.எஸ். சப்புவிட முன் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

அந்த நேரத்தில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீதிமன்றத்தில் சாட்சியாக ஆஜரானார்.

அதன்படி, வழக்கில் முதல் சாட்சியாகப் பெயரிடப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சாட்சியத்தைப் பதிவு செய்த பின்னர் அவரை விடுவிக்க உத்தரவிடப்பட்டது.

 


 

Post a Comment

Previous Post Next Post
video/Video

Contact Form