ஈஸ்டர் தாக்குதல் குறித்த புலனாய்வு தகவல்களை உதாசீனம் செய்தவர்களிடம் விசாரணை ஒப்படைக்கப்பட்டுள்ளது! நாமல் சுட்டிக்காட்டு

 உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவம் தொடர்பிலான புலனாய்வுத் தகவல்களை உதாசீனம் செய்த அதிகாரிகளிடம் தற்பொழுது விசாரணைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.

கொழும்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நல்லாட்சி அரசாங்க ஆட்சிக் காலத்தில் இந்த பாதுகாப்புதுறைசார் உயர் பதவிகளை வகித்தவர்கள் உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் குறித்த புலனாய்வுத் தகவல்களை உதாசீனம் செய்திருந்தனர் என தெரிவித்துள்ளார்.

அவ்வாறான அதிகாரிகளிடம் தற்பொழுது விசாரணைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் அரசியல் மேடைகளில் பிரசாரத்தில் ஈடுபட்டவர்களிடம் இந்த விசாரணைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும்,

இவர்கள் நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் வேறு விதமாக செயற்பட்டிருந்தனர் எனவும் என அவர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு தற்கொலை குண்டுதாரிகளின் தந்தை, மக்கள் விடுதலை முன்னணியின் தேசியப் பட்டியல் வேட்பாளர் என தற்பொழுது விசாரணைகளுக்கு பொறுப்பாக உள்ள அதிகாரியொருவர் அன்று கூறியிருந்தார்

அந்த அதிகாரிக்கு ஜே.வி.பி இன்று பதவி உயர்வு வழங்கி, உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவம் தொடர்பிலான விசாரணை நடத்தும் பொறுப்பினையும் ஒப்படைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

 


 

Post a Comment

Previous Post Next Post
video/Video

Contact Form