சுகாதார உத்தியோகத்தர்களின் உடல் மற்றும் உள ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் விசேட திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன் முதற்கட்டமாக, சுகாதார அமைச்சில் நிறுவப்பட்டுள்ள உடற்பயிற்சி கூடத்தை விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் உடற்பயிற்சி தொடர்பான டிப்ளோமாதாரி ஆலோசகர் ஒருவரின் கீழ், வாரத்தில் 5 வேலை நாட்களிலும் இந்த உடற்பயிற்சி கூடத்தைச் செயற்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.