நாய் கடித்ததை மறைத்த சிறுவன்- சுகயீனத்தால் பலி

 நீர் வெறுப்பு நோயால் பாதிக்கப்பட்டு காலி தேசிய வைத்தியசாலையில் ஏழு வயதுச் சிறுவன் ஒருவன் இன்றையதினம் உயிரிழந்துள்ள துயரச்சம்பவம் இடம்பெற்றுள்ளது

குறித்த வியடம் தொடர்பில் மேலும் தெரியவருவது

கடந்த மாதம் வீட்டில் வளர்த்து வந்த நாய் சிறுவனின் பிறப்புறுப்பு பகுதியை கடித்துள்ளதாகவும் இது குறித்து பெற்றோரிடம் எதுவும் கூறாமல், கீழே விழுந்ததில் காயம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் சிறுவனின்  உடல்நிலை மோசமடைந்ததை் தொடர்ந்து, சிகிச்சைக்காக காலி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில்

 சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்

பிரேத பரிசோதனையின்  பின்னர் சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

 


 

 

 

Post a Comment

Previous Post Next Post
video/Video

Contact Form