புத்தாண்டில் தீர்க்கப்பட்ட முன்விரோதம்; இளைஞன் வெட்டிக் கொலை!

 கண்டி - கலஹ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகேபிட்டிய பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞன் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக கலஹ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கொலை சம்பவம் நேற்று   மாலை இடம்பெற்றுள்ளது.

நவனெலிய, கொலபிஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞனே கொலை செய்யப்பட்டுள்ளார்.

முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறின் போது இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த கொலை சம்பவம் தொடர்பில் கொலபிஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய நபரொருவர்  கைது செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்த இளைஞனின் சடலம் பேராதனை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இந்நிலையில் மொனராகலை - வெல்லவாய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரணவராவ சந்தியில் உள்ள பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் நேற்று அதிகாலை நபரொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இளைஞன் ஒருவன் வெல்லவாய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெல்லவாய ரந்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதுடைய நபரொருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொலை சம்பவம் தொடர்பில் வெல்லவாய பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபரான வெல்லவாய ரந்தெனிய பிரதேசத்தில் வசிக்கும் 23 வயதுடைய  இளைஞன் ரணவராவ சந்தியில் வைத்து நேற்றைய தினம்   கைது செய்யப்பட்டுள்ளார். 



Post a Comment

Previous Post Next Post
video/Video

Contact Form