சமூக ஊடகங்களில் பரப்பப்படும் போலி கடிதம் : பொலிஸார் எச்சரிக்கை..!

 காவல் துறைக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கில் சமூக ஊடகங்களில் பரப்பப்படும் போலி கடிதம் குறித்து இலங்கை காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

‘CONVICTION’ என்று ஆங்கிலத்தில் தலைப்பிடப்பட்ட கடிதத்தில், பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் போலி கையொப்பமும், அரசு, உச்ச நீதிமன்றம் மற்றும் காவல் துறையின் போலியான அதிகாரப்பூர்வ சின்னங்களும் உள்ளன என்று காவல்துறை ஒரு அறிக்கையை வெளியிட்டது.

கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிலைப்பாடுகள் அல்லது உண்மைகள் காவல் துறையால் அறிவிக்கப்படவில்லை என்றும் பொதுமக்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது.

காவல்துறைக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கத்துடனும், பொதுமக்களை தவறாக வழிநடத்தும் நோக்கத்துடனும் இந்தப் போலி கடிதம் வெளியிடப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) விசாரணையைத் தொடங்கியுள்ளது என்றும் காவல்துறை மேலும் தெரிவித்துள்ளது.

 


 

Post a Comment

Previous Post Next Post
video/Video

Contact Form