கனடாவில் வாக்களிக்க தகுதியானவர்களுக்கு வெளியான முக்கிய அறிவுறுத்தல்

 கனடாவில் (Canada) தேர்தல் நெருங்கிவரும் நிலையில், வாக்காளர்களை ஏமாற்றக்கூடிய குறுஞ்செய்திகள் குறித்து மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமென அறிவுறுத்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன.

குறித்த அறிவுறுத்தலை Canadian Research Insights Council (CRIC) விடுத்துள்ளது.

கேல்கரியை சேர்ந்த ஸ்டேசி ஸ்கோனெக் என்பவர், அவரது கைபேசியில் "ERG National Research" என்ற பெயரில் வந்த வாக்குச்சோதனை குறுஞ்செய்திக்கு பதில் அளித்தபோது சந்தேகம் எழுந்துள்ளது.

இது தொடர்பில் அவர் தெரிவித்ததாவது, “முதலில் வாக்குப் போக்கைக் கேட்டார், பின்னர் பின்கோடு கேட்டார். உண்மையில் என் பெயர் தேவையில்லை என்பதே எனக்கு சந்தேகத்தை உருவாக்கியது,” என்று ஸ்டேசி கூறியுள்ளார்.

 இந்நிலையில், இதே போன்ற முறைப்பாடுகள் கனடா முழுவதும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பலர் இந்த குறுஞ்செய்திகளில் தங்களது தனிப்பட்ட தகவல்களை பகிர்ந்துவிட்டதற்குப் பிறகு அச்சத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

முக்கியமாக, மூத்த குடிமக்கள் இது போல பதில் அளித்துவிட்டு பின்னர் தங்களின் பாதுகாப்பு தொடர்பாக கவலைப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  




Post a Comment

Previous Post Next Post
video/Video

Contact Form