ஜம்மு காஷ்மீருக்கு சுற்றுலா செல்ல வேண்டாம் - அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தல்

 காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் வெளிநாட்டவர் உள்பட 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இதையடுத்து ஜம்மு காஷ்மீரின் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுக் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

பெஹல்காம் தாக்குதல் எதிரொலியாக காஷ்மீரில் இதுவரை 1500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த சம்பவத்துக்கு காரணமான பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று மத்திய அரசு உறுதியுடன் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் அமெரிக்கர்கள் ஜம்மு காஷ்மீருக்கு சுற்றுலா செல்ல வேண்டாம் என அந்நாட்டு தூதரகம் அறிவுறுத்தி உள்ளது. டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு சுற்றுலா வருபவர்கள் ஜம்மு காஷ்மீர் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளது.


 

Post a Comment

Previous Post Next Post
video/Video

Contact Form