யாழ்ப்பாணம்(jaffna) இளவாலை காவல்துறை பிரிவிற்குட்பட்ட மாதகல் பகுதியில் கஞ்சா மற்றும் வாள்கள் என்பவற்றுடன் இன்றையதினம்(28) மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 2 கிலோ 600 கிராம் கஞ்சாவும், மூன்று வாள்களும் ஒரு கூரிய ஆயுதமும் மீட்கப்பட்டது.
இளவாலை காவல் நிலையத்தில் விசாரணை
சந்தேகநபர்கள் மூவரும் இளவாலை காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர். விசாரணைகளின் பின்னர் அவர்களை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.