2017ஆம் ஆண்டு சென்னை மாங்காட்டைச் சேர்ந்த ஹாசினி என்ற சிறுமியை வன்கொடுமை செய்து கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், சிறுமி வசித்து வந்த அதே குடியிருப்பில் தங்கியிருந்த தஷ்வந்த் என்பவர் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கை செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் விசாரித்து வந்த நிலையில், தஷ்வந்த்-ஐ அவரது தந்தை ஜாமினில் வெளியே கொண்டு வந்தார். அதோடு வீட்டையும் குன்றத்தூருக்கு மாற்றினார்.
இதனிடையே தனது செலவுக்கு பணம் தராததால், தஷ்வந்த் தனது தாயாரையும் கொலை செய்துவிட்டு மும்பைக்கு தப்பினான். சென்னை காவல்துறையினர், தனிப்படை அமைத்து தஷ்வந்த்-ஐ கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சிறுமி கொலை வழக்கில் தஷ்வந்துக்கு 2018ஆம் ஆண்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. உயர் நீதிமன்றம் தூக்கு தண்டனையை உறுதி செய்ய நிலையில், உச்ச நீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறையீட்டில் தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடைவிதிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஜாமினில் வெளியே வந்து தாயை கொலை செய்ததாக கைதான வழக்கில் செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றம் இன்று தீர்ப்ப வழங்கியது. தந்தை பிழற்சாட்சியாக மாறிய நிலையில், போதிய ஆதாரங்கள் இல்லை எனக்கூறி தஷ்வந்த் விடுதலை செய்யப்பட்டார்.