யாழில் புத்தாண்டு தினத்தில் குடும்பஸ்தருக்கு நேர்ந்த துயரம்

 புத்தாண்டு தினத்தில் கள் இறக்குவதற்காக தென்னை மரத்தில் ஏறியவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் (jaffna) கல்வியங்காட்டை சேர்ந்த சின்னத்துரை ரவி (வயது 44) என்பவரே உயிரிழந்தவராவார்.

தென்னை மரத்தில் ஏறிய போது, தென்னையில் கட்டப்பட்டிருந்த பொச்சு மட்டை கழன்று விழுந்தமையால் நிலை தடுமாறி தென்னையில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார்.

கீழே விழுந்து படுகாயமடைந்தவரை மீட்டு யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

 


 

Post a Comment

Previous Post Next Post
video/Video

Contact Form