தேர்தல் விடுமுறை குறித்து வௌியான அறிவிப்பு

 தொழிலாளர் ஒருவர் வாக்களிப்பதற்காக விடுமுறை கோரினால், அது தொடர்பாக பணியமர்த்துபவர், தொழிலாளருக்கு போதுமானதாக கருதப்படும் குறைந்தபட்சம் இரண்டு மணி நேர பணி விடுமுறையை ஊதியத்துடன் வழங்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு விசேட அறிக்கை  ஒன்றை வெளியிட்டுள்ளது.

வாக்களிப்பதற்காக அனைவருக்கும் அவர்களது நிறுவனங்கள் விடுமுறை வழங்க வேண்டும்எனவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு வழங்கப்படும் விடுமுறை காலம், தற்காலிக தொழிலாளர்கள் உட்பட அனைத்து தொழிலாளர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய சிறப்பு விடுமுறையாக கருதப்பட வேண்டும் எனவும், இது தொழிலாளர்களின் வழக்கமான விடுமுறை உரிமைகளுக்கு வெளியில் இருக்க வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது


 

Post a Comment

Previous Post Next Post
video/Video

Contact Form