ஜம்மு காஷ்மீரின் பிரபல சுற்றுலா நகரமான பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22 இல் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிழந்தனர். இந்த தாக்குதலுக்கு லஷ்கர் இ தொய்பாவின் கிளை அமைப்பு பொறுப்பேற்றது. இந்த தாக்குதலுக்கு பின் இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது. பல உலக தலைவர்கள் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் இந்தியாவுக்கு அனைத்து உதவிகளையும் செய்வோம் என இந்திய வாமாசாவளியை சேர்ந்த அமெரிக்க எப்.பி.ஐ. இயக்குனர் காஷ் பட்டேல் தெரிவித்துள்ளார்
காஷ் பட்டேல் கூறியதாவது,
காஷ்மீரில் சமீபத்தில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எப்.பி.ஐ இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. மேலும் இந்திய அரசாங்கத்திற்கு எங்கள் முழு ஆதரவையும் தொடர்ந்து வழங்குவோம். பயங்கரவாதத்தின் தீமைகளால் உலகம் எதிர்கொள்ளும் தொடர்ச்சியான அச்சுறுத்தல்களை இந்த தாக்குதல் நினைவூட்டுகிறது என்றார்.
ஏற்கனவே இந்தியாவுக்கு ஆதரவு அளிப்பதாக அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குனர் துளசி கப்பார்ட் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது