கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கொக்கெய்ன் போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலைய வருகைப் பிரிவில் இன்று (30) காலை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மற்றும் விமான நிலைய சுங்கப் பிரிவு அதிகாரிகள் இணைந்து நடத்திய கூட்டுச் சோதனையின் போது 10 கிலோ கிராம் 323 கிராம் கொக்கெய்ன் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 38 வயதுடைய இத்தாலிய பிரஜை ஆவார்.
இவர் மூன்று பொம்மைகளுக்குள் போதைப்பொருளை சூசுமமாக மறைத்து நாட்டுக்குள் கடத்த முயற்சித்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய அதிகாரிகளும், பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.