நவம்பர் 11 முதல் பொதுச்சின்னம் கோரி விண்ணப்பிக்கலாம்: தேர்தல் ஆணையம்

 புதுடெல்லி:

தமிழகத்தில் தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க. என சில கட்சிகள் மட்டுமே தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற்றுள்ளன. மதிமுக, பாமக கட்சிகள் மாநில கட்சி என்ற அங்கீகாரத்தை இழந்துள்ளன.

தமிழகம் மட்டுமின்றி பீகார், மேற்கு வங்காளம், அசாம், கேரளா மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கும் பொதுச் சின்னம் கோரி விண்ணப்பிக்க வேண்டிய தேதிகளை அறிவித்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் பொதுச்சின்னம் கோரி விண்ணப்பிக்கலாம் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது:

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தல்களில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் அவர்களது கட்சி சின்னங்களில் தேர்தலில் போட்டியிடுவார்கள்.

பதிவு செய்யப்பட்ட கட்சிகளுக்கும், சுயேச்சை வேட்பாளர்களுக்கும் தேர்தல் ஆணையம் சின்னங்களை ஒதுக்கும். 234 தொகுதிகளில் 5 சதவீதத்திற்கு மேற்பட்ட இடங்களில் போட்டியிடும் கட்சிகளுக்கு பொதுச்சின்னம் வழங்கப்படும். இதற்காக தேர்தல் நடக்கும் காலகட்டத்தில் இருந்து 6 மாதத்திற்கு முன்பே தேர்தல் ஆணையத்தில் பொதுச்சின்னத்திற்கு விண்ணப்பிக்கலாம். அதன்படி தமிழ்நாடு சட்டப்பேரவையின் பதவிக்காலம் 2026 மே 10ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில் வரும் நவம்பர் 11ம் தேதி முதல் பொதுச்சின்னம் கோரி விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது.


 

Post a Comment

Previous Post Next Post
video/Video

Contact Form