ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலால் இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் பாகிஸ்தான் ஊடகங்களின்படி, பாகிஸ்தான் தரையிலிருந்து தரைக்கு பாய்ந்து தாக்கும் ஃபதே (Fatah) ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்துள்ளது. இந்த ஏவுகணை 120 கிலோமீட்டர் தூரம் வரை தாக்கும் என்று கூறப்படுகிறது.
ஃபதே ஏவுகணை, ஒரு குறுகிய தூர தரையிலிருந்து தரை இலக்கை தாக்கும் பாலிஸ்டிக் ஏவுகணை ஆகும். இது திட எரிபொருள் அடிப்படையிலான ஏவுகணை என்பதால், இதை விரைவாக ஏவ முடியும். இது வழக்கமான மற்றும் அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்டதாகக் கருதப்படுகிறது
இந்தியாவுடனான பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், பாகிஸ்தான் தனது ஏவுகணையை சோதிப்பது இது முதல் முறை அல்ல. சமீபத்தில் அது தரையிலிருந்து தரைக்கு 450 கிலோமீட்டர் தொலைவில் தாக்கும் திறன் கொண்ட அப்தாலி ஏவுகணை ஆயுத அமைப்பை சோதித்தது.