மின் கட்டணத்தை 18 சதவீதம் அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை – ஹர்ஷ டி சில்வா!

 எதிர்வரும் ஜூன் முதல் டிசம்பர் வரையிலான மின்சார கட்டணத்தை 18 சதவீதமாக அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

இது குறித்து எக்ஸ் சமூக ஊடகத்தளத்தில் அவர் இட்டுள்ள பதிவில், மின்சாரக் கட்டண உயர்வினை 9 சதவீததில் பராமரிக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பாக தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கமும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவும் சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) கலந்துரையாட வேண்டும் என்று அவர் மேலும் வலியுறுத்தினார்.

குறிப்பிடத்தக்க நிதி இழப்புகளைக் காரணம் காட்டி, 2025 ஜூன் முதல் டிசம்பர் வரையிலான காலத்திற்கு மின்சாரக் கட்டணங்களை 18.3% அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபை முன்மொழிந்துள்ள நிலையில் ஹர்ஷ டி சில்வாவின் இந்த கருத்துக்கள் வந்துள்ளன.

இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணையம் (PUCSL) தற்போது இந்தப் பரிந்துரையை மதிப்பாய்வு செய்து வருகிறது.

மேலும் பொதுமக்களின் ஆலோசனைகளைத் தொடர்ந்து ஜூன் முதல் வாரத்தில் அதன் முடிவை அறிவிக்கத் திட்டமிட்டுள்ளது.


 

Post a Comment

Previous Post Next Post
video/Video

Contact Form