நாட்டில் மொத்தம் 19,215 டெங்கு நோயாளிகள் பதிவு! தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு உறுதி!

 2025 ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் மொத்தம் 19,215 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.

அதன்படி ஜனவரி மாதத்தில் 4,936 பேரும், பெப்ரவரி மாதத்தில் 3,665 பேரும், மார்ச் மாதத்தில் 3,770 பேரும், ஏப்ரல் மாதத்தில் 5,175 பேரும் டெங்கு நோயாளிகளாக பதிவாகியுள்ளதுடன் மே மாதத்தின் முதல் 10 நாட்களில் 1,669 டெங்கு நோயாளிகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

அதேவேளை 10 மாவட்டங்கள் அதிக ஆபத்துள்ள டெங்கு வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, இரத்தினபுரி, மட்டக்களப்பு, திருகோணமலை, கண்டி, மாத்தளை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இருந்து அதிக டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.



Post a Comment

Previous Post Next Post
video/Video

Contact Form