மெக்சிகோவில் சோகம்: சங்கிலித்தொடர் விபத்தில் 21 பேர் பலி

 மெக்சிகோ சிட்டி:

மெக்சிகோவின் பியூப்லா மாகாணத்தில் இருந்து ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. குவாக்னோபாலன்-ஓக்சாகா நெடுஞ்சாலையில் சென்றபோது அந்த லாரி முன்னால் சென்ற வேனை முந்திச் செல்ல முயன்றது.

அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி எதிரே வந்த பஸ் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தன. இதனை தொடர்ந்து அந்த பஸ் தீப்பிடித்து எரிந்தது.

தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று தண்ணீரை பீய்ச்சியடித்தனர். அதற்குள் 21 பேர் உடல் கருகி பலியாகினர். படுகாயம் அடைந்த பலருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சங்கிலித் தொடர் விபத்தால் நெடுஞ்சாலையில் சில மணி நேரம் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

 


 

Post a Comment

Previous Post Next Post
video/Video

Contact Form