3 வயதில் ஆசிட் தாக்குதல்.. பார்வையிழந்த மாணவி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை!

 அரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தில் உள்ள புதானா கிராமத்தை சேர்ந்தவர் 17 வயதான கஃபி (Kafi).2011 ஆம் ஆண்டு தனது மூன்று வயதில் கஃபி ஆசிட் வீச்சுக்கு ஆளாகி பார்வையை இழந்தார்.

மூன்று வயதில் இருந்தே பல்வேறு சிரமங்களை சந்தித்த கஃபி தற்போது 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 95.6 சதவீத மதிப்பெண்களுடன் தனது பள்ளியில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.

சண்டிகரில் செக்டார் 26 இல் உள்ள பார்வையற்றோர் பள்ளியில் அவர் பயின்று வந்தார். ஆடியோ புக்குகள் மூலம் அங்கு கற்பிக்கப்பட்டது.

கடினமான பாதைகளை கடந்து சாதனை புரிந்துள்ள கஃபி டெல்லி பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் பட்டம் பெற்று ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என்று கூறுகிறார்.

ஏற்கனவே டெல்லி பல்கலைக்கழக நுழைவுத் தேர்வை எழுதி முடித்த கஃபி சீட் கிடைக்கும் என்று நம்பிக்கையோடு காத்திருக்கிறார்.

ஊடகத்துக்குப் பேட்டியளித்த கஃபி தன் மீதான ஆசிட் தாக்குதல் குறித்து பேசுகையில், மூன்று அண்டை வீட்டார் தன் மீது அமிலத்தை ஊற்றியதாகத் தெரிவித்தார்.

மேலும் "மருத்துவர்கள் என் உயிரைக் காப்பாற்றினர், ஆனால் அவர்கள் என் பார்வையைக் காப்பாற்றவில்லை. ஆசிட் தாக்குதலுக்குக் காரணமானவர்கள் இன்னும் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை. தன்னை கொடூரமாக நடத்தியவர்கள் இன்னும் சுதந்திரமாகச் சுற்றித் திரிகின்றனர்" என்று கஃபி கூறினார். 



Post a Comment

Previous Post Next Post
video/Video

Contact Form