போலி ஆவணங்களுடன் 3 இலங்கையர்கள் அல்பேனியாவில் கைது!

 போலி ஆவணங்களுடன் காஃபே-தானே எல்லைக் கடவையைக் கடக்க முயன்ற மூன்று இலங்கையர்களை அல்பேனிய எல்லைக் காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

அவர்கள் ஒவ்வொருவரும் இத்தாலியை தங்கள் பயண இலக்காகக் கொண்டிருந்தாக கைது தொடர்பில் அல்பேனிய பொலிஸார் வெளியிட்டிருந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதேநேரத்தில், கைதனா நபர்களிடம் காணப்பட்ட போலியான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கைதான நபர்கள் 57, 21 மற்றும் 36 வயதுடைய நபர்கள் ஆவர்.

சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக, உளவுத்துறை வழங்கிய தகவலின் அடிப்படையில், எல்லை காவல் சேவைகளின் பணியின் தொடர்ச்சியாக, காஃபே தானே எல்லை கடக்கும் இடத்தில் இந்த கைது முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 


 

Post a Comment

Previous Post Next Post
video/Video

Contact Form