சிவகங்கை மாவட்டம் மல்லாக்கோட்டையில் உள்ள கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்ததில் 5 தொழிலாளர்கள் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
மல்லாக்கோட்டையில் உள்ள மேகா மெட்டல் கல்குவாரியில் 450 அடி ஆழ குவாரியில் இறங்கி தொழிலாளர்கள் பணியாற்றிக்கொண்டு இருந்தனர்.
குவாரியில் வெடி வைத்து பாறையை தகர்த்தபோது திடீரென பாறைகள் சரிந்து தொழிலாளர்கள் மீது விழுந்தது. இந்த விபத்தில 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இடிபாடுகளில் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.