79 மில்லியன் ரூபா பெறுமதியான கஞ்சாவுடன் வெளிநாட்டவர் கைது!

 ஷ் கஞ்சாவை கடத்திய குற்றச்சாட்டுக்காக கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA) வருகை முனையத்தில் இன்று (19) அதிகாலை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் வெளிநாட்டுப் பிரஜை ஒருவரை கைது செய்துள்ளனர்.

இவரிடமிருந்து கைப்பற்ப்பட்ட போதைப்பொருளின் பெறுமதியானது சுமார் 79 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

சந்தேக நபர் 21 வயதான தாய்லாந்து நாட்டவர் ஆவர்.

தாய்லாந்தில் குஷ் கஞ்சாவை வாங்கி, அதனுடன் மலேசியாவின் கோலாலம்பூருக்குப் பயணம் செய்து, பின்னர் நள்ளிரவு 12 மணிக்கு மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் MH-179 இல் அவர் BIA ஐ வந்தடைந்தார்.

அவரது பொதிகளில் இனிப்புகள் அடங்கிய பல பாக்கெட்டுகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மொத்தம் 7 கிலோகிராம் 910 கிராம் குஷ் கஞ்சாவை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேக நபரும் குஷ் கஞ்சாவும் மேலதிக விசாரணைக்காக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்திடம் (PNB) ஒப்படைக்கப்பட்டுள்ளன.

 


 

Post a Comment

Previous Post Next Post
video/Video

Contact Form