நகைக்கடன் கட்டுப்பாடுகளை தளர்த்த ரிசர்வ் வங்கிக்கு மத்திய நிதி அமைச்சகம் அறிவுறுத்தல்

 நகைக்கடன் கட்டுப்பாடுகளை தளர்த்த ரிசர்வ் வங்கிக்கு மத்திய நிதி அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.

சிறிய அளவில் நகைக்கடன் பெறுவோர் பாதிக்கப்படக்கூடாது என ரிசர்வ் வங்கிக்கு மத்திய நிதி அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. ரூ.2 லட்சத்திற்கு குறைவாக கடன் வாங்குபவர்களுக்கு விலக்களிக்க மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது.

நகைக்கடன் வழங்க நிபந்தனைகள் விதிக்கப்பட்டதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில் நகைக்கடன் நிறுவனங்கள், பொதுமக்களின் கருத்துகளின் அடிப்படையில் விதிகளை தளர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

நகைக்கடனுக்கான புதிய விதிமுறைகளை தற்போது அமல்படுத்த வேண்டாம் என்றும் மத்திய நிதியமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. 



Post a Comment

Previous Post Next Post
video/Video

Contact Form