வெளிநாட்டு பிரஜைக்கு இலங்கையில் நேர்ந்த விபரீதம்

 ஹிக்கடுவ கடலில் நீராடச் சென்ற வௌிநாட்டு பிரஜை ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் நேற்று (18) பிற்பகல் நீரில் மூழ்கி காணாமல் போனதாக ஹிக்கடுவ பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

அதற்கமைய, உயிர் காக்கும் பிரிவினரின் உதவியுடன் குறித்த நபரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், நேற்றிரவு வேவல கடற்கரைப் பகுதியில் குறித்த நபரின் சடலம் கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த நபர் அவரது சகோதரருடன் ஹிக்கடுவ கடலில் நீராடிக்கொண்டிருந்த போதே இந்த விபத்துக்கு ஏற்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் உயிரிழந்த நபர் 43 வயதுடைய நோர்வே நாட்டைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹிக்கடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  



Post a Comment

Previous Post Next Post
video/Video

Contact Form