அச்சங்குளம் கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு!

 மன்னார்- நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட அச்சங்குளம் கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் ஆணொருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது.

குறித்த சடலம் நேற்று (17) இரவு அப்பகுதிக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களினால் கண்டுபிடிக்கப்பட்டது.

குறித்த ஆணின் சடலம் முற்றிலும் சிதைவடைந்துள்ள போதும் சிதைவடையாமல் காணப்படும் ஆடைகளை வைத்து குறித்த ஆண் 30 வயதுக்கு மேல் இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

மீனவர்கள் அச்சங்குளம் கிராம சேவையாளருக்கு அறிவித்ததை தொடர்ந்து கிராம சேவையாளர் முருங்கன் பொலிஸார், அச்சங்குளம் கடற்படையினர் அப்பகுதிக்கு விரைந்து குறித்த உடலை பார்வையிட்டனர்.

சடலம் தொடர்பான பூரண தகவல்கள் அடையாளங்காணப்படாத நிலையில் சடலத்தை மீட்ட முருங்கன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


 

Post a Comment

Previous Post Next Post
video/Video

Contact Form