பாகிஸ்தானில் இருந்து அஞ்சல் பரிமாற்றத்தை நிறுத்த மத்திய அரசு முடிவு

 ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் கடந்த 22-ந்தேதி சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பயங்கரவாதிகளின் கொடூர தாக்குதலுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்த தாக்குதலில் பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் ஈடுபட்டிருப்பது தேசிய புலனாய்வு பிரிவு (என்.ஐ.ஏ.) விசாரணையில் தெரியவந்துள்ளது.

பாகிஸ்தானின் தூண்டுதலின் பேரிலேயே தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், பாகிஸ்தானில் இருந்து அஞ்சல்கள் மற்றும் பார்சல்களின் பரிமாற்றத்தை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசின் தபால் துறை அதிரடியாக அறிவித்துள்ளது.

பாகிஸ்தானில் இருந்து வான்வழி மற்றும் தரைவழி மூலம் அனைத்து வகையான அஞ்சல்கள் மற்றும் பார்சல்களில் பரிமாற்றம் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.


 

Post a Comment

Previous Post Next Post
video/Video

Contact Form