இன்றும் பாகிஸ்தான் சரமாரி டிரோன் தாக்குதல்: சைரன் ஒலிப்பு- இருளில் மூழ்கிய எல்லை மாநில நகரங்கள்

 ஜம்மு காஷ்மீரின் உரி பகுதியை குறி வைத்து எல்லைக்கு அப்பால் இருந்து பாகிஸ்தான் படைகள் பயங்கரத் தாக்குதல் நடத்தி வருகிறது.

ஜம்மு காஷ்மீரின் உரி பகுதியில் பீரங்கி குண்டுகளை வீசி பாகிஸ்தான் ராணுவம் தீவிர தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்திய நிலையில் Black out (மின்சாரம் துண்டிப்பு) செய்யப்பட்டுள்ளது.

ஜம்மு, ஸ்ரீநகர், சம்பா, பதார்கோட் உள்ளிட்ட இடங்களில் முழுமையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு சைரன் ஒலிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், போர் பாதுகாப்பு நடவடிக்கையாக ராஜஸ்தான் மாநில பார்மரில் முழுமையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப்பின் பிரோஸ்பூரிலும் மின்சாரத்தை துண்டித்து பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மேலும், அரியானாவின் பஞ்ச்குலா, அம்பாலாவில் மின்சாரத்தை துண்டித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


 

Post a Comment

Previous Post Next Post
video/Video

Contact Form