செம்பியன்பற்று பகுதியில் தொடர்சியாக அதிகரித்து வரும் சட்டவிரோத மண் அகழ்வு!

 யாழ்.வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று வடக்கு பகுதியில், சட்டவிரோத மண்  அகழ்வு தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

செம்பியன்பற்று பகுதியில் மக்கள் குடியிருப்புகள் காணப்படும் பகுதியிலேயே குறித்த மண் கொள்ளை இடம் பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் கடத்தல் கும்பலுக்கு சில குடும்பங்கள் உதவி செய்து வருவதாகவும் இவ்வாறு மண் அகழ்வு தொடர்ந்தால் குறித்த கிராமப்பகுதியில் பாரிய நீர்த்தேக்கம் ஏற்பட்டு மழைக்காலத்தில் உயிர் சேதங்கள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதாகவும்,  மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மேலும்  குறித்த மண் கடத்தலில் தனிப்பட்ட நபரே தொடர்ந்து செயற்பட்டு வருவதாகவும் அவர் தொடர்பில் பல முறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளபோதும் பொலிசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் விசனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


Post a Comment

Previous Post Next Post
video/Video

Contact Form