கொட்டாவ மலபல்ல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி!

 கொட்டாவ மலபல்ல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹோமாகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொட்டாவ மலபல்ல பகுதியில் விகாரை ஒன்றுக்கு அருகாமையில் நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஹோமாகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்

மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த நபரை இலக்கு வைத்து பிரிதொரு மோட்டார் சைக்கிளில் பயணித்த அடையாளந்தெரியாத இரண்டு நபர்களினால் 9 மில்லமீற்றரக துப்பாக்கியால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கி சூட்டில் காயமடைந்த நபர் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் ஹிக்கடுவ பகுதியைச் சேர்ந்த ஜகத் இந்திக குமார எனும் 43 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நடத்தப்பட்ட 43 துப்பாக்கி சூட்டு சம்பவங்களில் 29 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 23 பேர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 94 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


 

Post a Comment

Previous Post Next Post
video/Video

Contact Form