ஐரோப்பிய யூனியனால் முடக்கப்பட்ட ரஷியாவின் சொத்துகளை பயன்படுத்தி நாங்கள் ஆயுதங்கள் கொள்முதல் செய்ய 1.9 பில்லியன் யூரோஸ் உதவி செய்ய இருப்பதாக உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷ்மிஹால் தெரிவித்துள்ளார்.
சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலில் டெனிஸ் ஷ்மியால் கூறியிருப்பதாவது:-
உக்ரைனில் ஆயுதங்கள் தயாரிக்கும் நிறுவனங்களிடம் இருந்து நேரடியாக ஆயுதங்கள் கொள்முதல் செய்ய சுமார் ஒரு பில்லியன் யூரோஸ் உதவியாக கிடைக்க இருக்கிறது.
600 மில்லியன் யூரோஸ் வெடிப்பொருட்கள் வாங்குவதற்கும், 200 மில்லியன் உக்ரைனின் பாதுகாப்பு சிஸ்டத்தை பலப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படும்.
டென்மார்க், பிரான்ஸ், நெதர்லாந்து, இத்தாலி ஆகிய நாடுகள் 1 பில்லியன் யூரோக்கள் மதிப்பில் ஆயுதம் வாங்க உதவி செய்ய இருப்பதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ராணுவ உதவி வரலாற்று சிறப்புமிக்கது. ஏனென்றால் ஆயுதங்கள் ரஷியாவின் முடக்கப்பட்ட சொத்துகளில் இருந்து பெறப்பட்ட வருமானம் மூலம் கொள்முதல் செய்யப்ட இருக்கிறது என உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.