இராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்புரிமை தொடர்பான முக்கிய உத்தரவு!

 நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பதவியை இரத்து செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும்  ஜூன் மாதம் 26 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த மனு  நீதிபதிகள் மாயாதுன்னே கொரயா மற்றும் மஹேன் கோபல்லவா ஆகியோர் அடங்கிய மேல்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன் விசாரிக்கப்பட்டுள்ளது.

அமர்வின் பின்னர் இந்த மனுவை ஜூன் 26 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இந்த மனுவை சமூக ஆர்வலர் ஓஷலா ஹெராத் தாக்கல் செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


 

Post a Comment

Previous Post Next Post
video/Video

Contact Form