உச்சநீதிமன்றத்தின் 51-ஆவது தலைமை நீதிபதியாக கடந்த நவம்பர் மாதம் பதவியேற்ற சஞ்சீவ் கன்னாவின் பதவிக் காலம் நேற்றோடு நிறைவு பெற்றது.
இதனிடையே உச்சநீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியாக பூஷன் ராமகிருஷ்ண கவாயை (B.R. காவாய்) நியமிக்க சஞ்சீவ் கன்னா பரிந்துரைத்தார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் நியமனத்திற்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்தார்.
அதன்படி, உச்ச நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் இன்று பொறுப்பேற்கிறார். வரும் நவம்பர் மாதம் ஓய்வுபெறும் வரை 6 மாத காலம் அவர் இந்த பதவியில் தொடர்வார்.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த கவாய், பணமதிப்பிழப்பு உறுதி செய்த தீர்ப்பு, தேர்தல் பத்திரம் செல்லாது என்ற தீர்ப்பு உள்ளிட்ட முக்கிய தீர்ப்புகள் வழங்கப்பட அமர்வில் இடம்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.