துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சர் விசேட அறிவிப்பு!

 கடந்த 7 மாதங்களில் 79 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்

அதன்படி கடந்த ஆண்டு செப்டம்பர் 21 ஆம் திகதி முதல் நேற்று வரை நடந்த துப்பாக்கிச் சூடுகளில் 52 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்த துப்பாக்கிச் சூடுகளில், 62 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களால் நடத்தப்பட்டன என்றும் அவர் தெரிவித்தார்.

இருப்பினும், துப்பாக்கிச் சூடு தொடர்பாக 260 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 229 பேர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் என்றும் அமைச்சர் கூறினார்.

பாதாள உலகத்தை ஒடுக்குவதற்கு அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும், 2022, 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளைப் பார்க்கும்போது குற்றங்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு எதுவும் இல்லை என்றும், எந்தவொரு சூழ்நிலையிலும் மனித உயிர்கள் இழக்கப்படுகின்றன என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அரசாங்கம் உயர் மட்ட முடிவுகளை எடுத்துள்ளதுடன் மேலும் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் கடுமையான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

 


 

Post a Comment

Previous Post Next Post
video/Video

Contact Form