ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக டெல்லியில் ராணுவம் உள்ளிட்ட முப்பபை அதிகாரிகள் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்று வருகிறது. இதில், இந்திய ராணுவத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அதிகாரிகள் செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்து வருகின்றனர்.
ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி, லெஃப்டினன்ட் ஜெனரல் ராஜீவ், வைஸ் அட்மிரல் பிரமோத், மேஜர் ஜெரனல் ஷர்தா ஆகியோர் உள்ளனர்.
அப்போது, அபேரஷன் சிந்தூர் குறித்து லெஃப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் காய் கூறியதாவது:-
எனது ஐந்து சகாக்கள் மற்றும் ஆயுதப்படைகளைச் சேர்ந்த சகோதரர்கள் மற்றும் ஆபரேஷன் சிந்தூரில் துயரகரமாக உயிரிழந்த பொதுமக்களுக்கு எனது மனமார்ந்த அஞ்சலியைச் செலுத்துகிறேன்.
துயரமடைந்த குடும்பங்களுக்கு எங்கள் இதயங்கனிந்த அஞ்சலி செலுத்துகின்றன. அவர்களின் தியாகங்கள் எப்போதும் நினைவுகூரப்படும்.
இதுவரை நாங்கள் மிகுந்த நிதானத்தைக் கடைப்பிடித்துள்ளோம், எங்கள் நடவடிக்கைகள் கவனம் செலுத்தி, அளவிடப்பட்டு, தீவிரமடையாமல் உள்ளன. இருப்பினும், நம் குடிமக்களின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பிற்கு ஏற்படும் எந்தவொரு அச்சுறுத்தலும் தீர்க்கமான சக்தியுடன் எதிர்கொள்ளப்படும்.
பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதலில் தரைவழி, வான்வழி தடுப்பு தொழில்நுட்பங்கள் இந்திய ராணுவத்தால் பயன்படுத்தப்பட்டன. பயங்கரவாதத்தை ஆதரிப்பதால் ஏற்படும் வலயை பாகிஸ்தான் உணரச் செய்துள்ளோம்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்திய ராணுவத்தின் சார்பில் நீதி நிலைநாட்டப்பட்டது. பாகிஸ்தான் ராணுவத்தினரை கொல்வது நமது நோக்கமாக இருக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.