நியூஸிலாந்து துணைப் பிரதமர் இலங்கைக்கு விஜயம்!

 நியூசிலாந்தின் துணைப் பிரதமரும், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருமான வின்ஸ்டன் பீட்டர்ஸ் எதிர்கூரம் மே 24 முதல் 28 வரையில் இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

இவ்விஜயத்தின் போது, ​​துணைப் பிரதமர், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் பிரதமரும் பேராசிரியருமான ஹரிணி அமரசூரிய ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்திக்கவுள்ளார்.

அத்துடன், வர்த்தகம் மற்றும் முதலீடு, விவசாயம், கல்வி, இணைப்பு, சுற்றுலா மற்றும் விளையாட்டு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் எச்.எம். விஜித ஹேரத்துடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது துணைப் பிரதமர் பீட்டர்ஸ், பல தனியார் துறை மற்றும் ஊடகங்களுடன் உரையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை வெளிவிகார அமைச்சு தெரிவித்துள்ளது.

துணைப் பிரதமருடன், நியூசிலாந்தின் வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வர்த்தக அமைச்சின் மூன்று சிரேஷ்ட அதிகாரிகளும் விஜயமளிக்கவுள்ளனர்.


 

Post a Comment

Previous Post Next Post
video/Video

Contact Form