கூடலூர்:
தென்மேற்கு பருவமழை இன்று தொடங்கியதாக சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்தது. அந்தமானில் தொடங்கிய நிலையில் கேரளாவில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
ஆனால் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலையே நிலவி வருகிறது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் தேனி மாவட்டத்தில் மழைப்பொழிவு இல்லாததால் அணைகளுக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்தது.
குறிப்பாக வைகை அணைக்கு தண்ணீர் வரத்து முற்றிலும் நின்று விட்டது. இதனால் அணையின் நீர்மட்டமும் 53.58 அடியாக சரிந்துள்ளது. மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 72 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 2496 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது. முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 114.45 அடியாக உள்ளது. 3 கன அடி நீர் வருகிறது. 100 கன அடி நீர் தமிழக பகுதிக்கு திறக்கப்படுகிறது. அணையில் 1635 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 38.30 அடியாக உள்ளது. 14 கன அடி நீர் வருகிறது. திறப்பு இல்லை.
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 98.23 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சண்முகா நதி அணையின் நீர்மட்டம் 41.70 அடியாக உள்ளது. 6 கன அடி நீர் வருகிற நிலையில் திறப்பு இல்லை. மழை எங்கும் இல்லை.