ட்ரம்பின் வரி விதிப்புக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மிக அதிகமான வரிகளை ஒரு கூட்டாட்சி மேல்முறையீட்டு நீதிமன்றம் தற்காலிகமாக மீட்டெடுத்தது.

டெனால்ட் ட்ரம்ப் தனது அதிகாரத்தை மீறி வரிகளை விதித்ததாக அமெரிக்க வர்த்தக நீதிமன்றம் தீர்ப்பளித்து, அவற்றை உடனடியாகத் தடை செய்ய உத்தரவிட்ட ஒரு நாளுக்குப் பின்னர் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

தீர்ப்பினை அறிவித்த வொஷிங்டனில் அமைந்துள்ள ஒரு அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம், அரசாங்கத்தின் மேல்முறையீட்டை பரிசீலிப்பதற்காக இந்த உத்தரவினை பிறப்பித்ததாக கூறியது.

இதன் பொருள் சர்வதேச வர்த்தக நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பு மற்றும் உத்தரவுகள் தற்போதைக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

மேலும், வழக்குகளில் உள்ள வாதிகள் ஜூன் 5 ஆம் திகதிக்குள் பதிலளிக்கவும், நிர்வாகம் ஜூன் 9 ஆம் திகதிக்குள் பதிலளிக்கவும் உத்தரவிட்டது.

புதன்கிழமை அமெரிக்க சர்வதேச வர்த்தக நீதிமன்றத்தின் எதிர்பாராத தீர்ப்பு, பெரும்பாலான அமெரிக்க வர்த்தக கூட்டாளிகளிடமிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ட்ரம்பின் விடுதலை தின வரிகள் என்று அழைக்கப்படும் வரிகளை விதிப்பதைக் தடுக்கும் அல்லது குறைந்தபட்சம் தாமதப்படுத்தும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது.

வரிகள் மற்றும் கட்டணங்களை விதிக்கும் அதிகாரத்தை அரசியலமைப்பு ஜனாதிபதிக்கு அல்ல, காங்கிரசுக்கு வழங்கியது என்றும், தேசிய அவசரநிலைகளின் போது ஏற்படும் அச்சுறுத்தல்களை நிவர்த்தி செய்யும் நோக்கில் சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டத்தைப் பயன்படுத்துவதன் மூலம் ஜனாதிபதி தனது அதிகாரத்தை மீறிவிட்டார் என்றும் வர்த்தக நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட குழு தீர்ப்பளித்தது.

நீதி மன்ற தீர்ப்புக்கு பின்னர், வர்த்தக நீதிமன்றத்தின் தீர்ப்பால் தாங்கள் பின்வாங்கவில்லை என்று ட்ரம்ப் நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகள் கூறியிருந்தனர்.

சர்வதேச வர்த்தக பேச்சுவார்த்தைகளில், உலகின் கிட்டத்தட்ட எல்லா நாடுகளிலிருந்தும் பொருட்களுக்கு அமெரிக்க இறக்குமதியாளர்களிடம் விலையுயர்ந்த வரிகளை வசூலிக்கும் அச்சுறுத்தலை ட்ரம்ப் பயன்படுத்தியுள்ளார்.

இது வர்த்தக நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒரு உத்தியாக இருக்கும். வர்த்தக நீதிமன்றத்தின் தீர்ப்பு, வரும் நாட்களில் திட்டமிடப்பட்டுள்ள உயர் வர்த்தக கூட்டாளர்களுடனான எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் தலையிடவில்லை என்றும் ட்ரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


 

Post a Comment

Previous Post Next Post
video/Video

Contact Form