அரசாங்கம் பலவீனமடைந்துள்ளதாகக் கூறப்படும் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது! -ஜனாதிபதி

 ”உள்ளுராட்சிமன்ற சபைத் தேர்தலில் அரசாங்கம் பலவீனமடைந்துள்ளதாகக் கூறப்படும் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் தேர்தல் முறைமைக்கு அமைவாகவே இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும்”  ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பு விகாரமாதேவி பூங்கா வளாகத்தில் நடைபெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் 60 ஆண்டு விழா நிகழ்வில்  கலந்து கொண்டு உரையாற்றிய  போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது  ”அரசாங்கம் விரைவாக செயற்படுவதில்லை என்று குற்றஞ்சாட்டுக்கள் சுமத்தப்படுவதாகவும் ,  அரசாங்கத்தின் விரைவுத் தன்மையை இன்னும் இரண்டு வாரத்துக்குள் தெரிந்து கொள்ள முடியும் எனவும் ஜனாதிபதி உறுதி அளித்துள்ளார்.

அத்துடன்  மக்களாணை தம்மிடமே உள்ளது எனவும், மக்களாணைக்கு தடையேற்படுத்தினால் அரசியலமைப்பு மற்றும் சட்டத்தின் பிரகாரம் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும் மனசாட்சியுடன் செயற்படுவதற்கு அதிகாரத்தில் இருக்க வேண்டிய அவசியம் கிடையாது எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி மனசாட்சியுடன் செயற்படுவது தமது கட்சியின் பிரதான கொள்கையாகும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.


 

Post a Comment

Previous Post Next Post
video/Video

Contact Form