இந்நாட்டில் தீண்டாமை பல்வேறு வடிவங்களில் உள்ளது. சாதியை காரணமாகக் காட்டி, கோயில் விழாவில் குறிப்பிட்ட சமூகத்தினரிடம் நன்கொடை பெற மறுப்பதும் அதில் ஒன்றுதான் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்தது.
குன்றத்தூர் திருநாகேஸ்வரர் கோயில் பிரமோற்சவ விழாவில், குறிப்பிட்ட சமூகத்தினரிடம் மட்டுமே நன்கொடை வசூலிக்கப்படுகிறது எனத் தொடரப்பட்ட வழக்கில், அனைத்து சமூகத்தினரிடமும் நன்கொடை வசூலிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மனுவை பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் எனவும் இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.