காதலர்களுக்கு நேர்ந்த துயரம் !

 மாத்தறை - தங்காலை கரையோர வீதியில் நேற்று (13) இரவு இடம்பெற்ற விபத்தில் காதலர்கள் இருவர் உயிரிழந்துள்ளதாக மாத்தறை பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிள் ஒன்று முன்னால் பயணித்த பஸ்ஸை கடந்துச் செல்ல முயன்ற போது, மோட்டார் சைக்கிளானது வீதியில் சறுக்கிச் சென்று பஸ்ஸுக்கு அடியில் சிக்கி விபத்து இடம்பெற்றுள்ளது.

பேருந்து  அடியில் சிக்கி விபத்து

விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த காதலர்கள் இருவர் படுகாயமடைந்து  கவலைக்கிடமான
நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


சம்பவத்தில் அம்பாந்தோட்டை வீரவில பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய காதலியும் மாத்தறை பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய காதலனுமே உயிரிழந்துள்ளனர்.

 இவர்கள் இருவரும் வெசாக் அலங்காரங்களை கண்டுகளிப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுக்கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பில் பஸ் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளை மாத்தறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


 

Post a Comment

Previous Post Next Post
video/Video

Contact Form