நிஹால் அபேசிங்கவுக்கு நாடாளுமன்றக் குழுவில் புதிய பதவி!

 சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர் வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் பதவிக்கு தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நிஹால் அபேசிங்க தெரிவுசெய்யப்பட்டார்.

நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் (22) கூடிய சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர் வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுக் கூட்டத்திலேயே இத்தெரிவு இடம்பெற்றது. இந்தத் துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் பதவியை ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்குவதற்கு ஏற்கனவே ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் இணங்கியிருந்தன.

இதற்கமைய தலைவர் பதவிக்கு வைத்தியர் நிஹால் அபேசிங்க அவர்களின் பெயர் தேசிய ஒருமைப்பாட்டு பிரதியமைச்சர் முனீர் முளப்பர் அவர்களினால் முன்மொழியப்பட்டதுடன், நாடாளுமன்ற உறுப்பினர் சமன்மலி குணசிங்க அதனை வழிமொழிந்தார்.

சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர் வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.



Post a Comment

Previous Post Next Post
video/Video

Contact Form