இந்தியா - பாகிஸ்தான் சண்டை நிறுத்தம்: அமெரிக்க வெளியுறவு அமைச்சர் வரவேற்பு

 காஷ்மீரில் பஹல்காம் சுற்றுலா தலத்தில் 26 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது.

இதனையடுத்து இந்தியாவில் பல இடங்களில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில், இந்தியா -பாகிஸ்தானும் சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார்.

இதனையடுத்து இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடியாக சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொள்வதாக அறிவித்தது. மே 12 ஆம் தேதி இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன.

இந்நிலையில், இந்தியா, பாகிஸ்தான் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான அவரது பதிவில், "நடுநிலையான இடத்தில் பல்வேறு பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை தொடங்குவதாகவும் அறிவிப்பதில் மகிழ்ச்சி. அமைதிப் பாதையைத் தேர்ந்தெடுப்பதில் பிரதமர் மோடி மற்றும் ஷெரீப்பின் ஞானம், விவேகம், அரசியல் திறமைக்கு பாராட்டு" என்று பதிவிட்டுள்ளார். 



Post a Comment

Previous Post Next Post
video/Video

Contact Form