பாரீஸ்:
ஐரோப்பிய நாடான பிரான்சில் புகை பிடிப்பதால் ஒரு நாளில் சராசரியாக 200 பேர் இறப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
இது புகை பிடிப்பவர் மட்டுமின்றி அதனை சுவாசிப்பவர்களுக்கும் தீங்கு விளைவிக்கிறது. குறிப்பாக குழந்தைகளிடம் அதிகம் பாதிப்பை ஏற்படுத்துகின்றது.
எனவே குழந்தைகளைப் பாதுகாக்கும் நோக்கில் பள்ளிகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் கடற்கரை, பூங்காக்கள் அருகே புகை பிடிப்பதை தடை விதிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அடுத்த மாதம் (ஜூலை) 1-ம் தேதி முதல் இந்தத் தடை அமலுக்கு வரும் என சுகாதாரத்துறை மந்திரி கேத்தரின் வவுட்ரின் தெரிவித்தார்.
அதே சமயம், இ-சிகரெட்டுகளுக்கு இதில் விலக்கு அளிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.