மத்தியப் பிரதேசத்தில் வேன் கிணற்றில் விழுந்ததில் 10 பேர் உயிரிழந்தனர். 4 பர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று பிற்பகல் மந்த்சௌர் மாவட்டத்தில் உள்ள கச்சாரியாவில் இந்த விபத்து நிகழ்ந்தது. விபத்து நடந்தபோது வேனில் 10 க்கும் மேற்பட்டோர் இருந்தனர். இரு சக்கர வாகனம் மீது மோதிய வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த கிணற்றுக்குள் பாய்ந்தது.
வேனில் இருந்தவர்கள் கோவிலுக்குச் சென்று கொண்டிருந்தனர் என்று தெரியவந்துள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். கிணற்றில் விஷ வாயு இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். பாதிக்கப்பட்டவர்களை மீட்க கிணற்றில் இறங்கிய உள்ளூர்வாசி ஒருவரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.