16 சிறுவர்கள் மீது பாலியல் துஷ்பிரயோகம்; விளையாட்டு பயிற்றுநர் கைது

 கிளிநொச்சியில் 16 சிறுவர்களை பாயில் துஸ்பிரயோகம் செய்த விளையாட்டு பயிற்றுநர் இன்று பகல் கிளிநொச்சி பொலீஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருந்து வந்து குறித்த நபர் தொடர்பில் பொலீஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக, கிளிநொச்சி குற்றத்தடுப்பு பொலீஸார் சந்தேக நபரை கிளிநொச்சி அறிவியல் நபர் பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் தற்போது கிளிநொச்சி பொலீஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றார்.

மேலதிக சட்ட நடவடிக்கைக்காக நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.

 


 

Post a Comment

Previous Post Next Post
video/Video

Contact Form