புத்தாண்டு பருவ காலத்தில் அதிவேக நெடுஞ்சாலையில் கொட்டிய வருமானம்

 புத்தாண்டு பருவ காலத்தில், கடந்த 2 நாட்களில் அதிவேக நெடுஞ்சாலையின் வருமானம் 100 மில்லியனைத் தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏப்ரல் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் 297,736 வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலையில் இயக்கப்பட்டதாக நெடுஞ்சாலைகள் செயல்பாடுகள், பராமரிப்பு மற்றும் மேலாண்மைப் பிரிவின் துணை இயக்குநர் ஜெனரல் ஆர்.ஏ.டி. கஹடபிட்டிய தெரிவித்தார்.

ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட வாகனங்கள் பயணம்

அதன்படி, அந்தக் காலகட்டத்தில், அதிவேக நெடுஞ்சாலையிலிருந்து ஒரு லட்சத்து இருபத்து மூன்று மில்லியன் எழுபத்தெட்டாயிரத்து எண்ணூறு ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

 ஏப்ரல் 11 ஆம் திகதி அதிவேக நெடுங்சாலையில் 163,541 வாகனங்கள் இயக்கப்பட்டு, 54,066,450 வருவாய் ஈட்டியதாக அவர் குறிப்பிட்டார்.

மேலதிகமாக, ஏப்ரல் 12 ஆம் திகதி அதிவேக நெடுஞ்சாலையில் 134,195 வாகனங்கள் இயக்கப்பட்டு, ரூ.47,012,350. வருவாய் ஈட்டியதாகக் கூறப்படுகிறது.  




Post a Comment

Previous Post Next Post
video/Video

Contact Form